வாய்ப்புகள் நிறைந்த
ஒரு பயணம்.
கோயம்புத்தூர் சம்ஸ்காரா அகாடமியில், மாண்டிசோரியில் தொடங்கும் குழந்தைகளின் கண்டுபிடிப்புகள், ICSE வகுப்புகளில் சுயமாகச் சிந்திக்கும் திறனாக வளர்கின்றன.
இயக்குநரின் வரவேற்புரை
சம்ஸ்காராவில் என் அம்மா பிருந்தாவின் பணியைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன். எப்போது காத்திருக்க வேண்டும் என்பது ஓர் ஆசிரியர் எடுக்கும் முக்கியமான முடிவு. உருளையை அதற்குரிய குழியில் பொருத்த முயலும் குழந்தைக்கு, இன்னொரு முறை முயன்று பார்க்க நேரமும், அருகில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒருவரின் துணையும் தேவைப்படலாம்.
நீங்கள் பள்ளிக்கு வரும்போது, வீட்டில் உங்கள் குழந்தை எதில் தன்னை மறந்து ஈடுபடுகிறது என்று எங்களிடம் சொல்லுங்கள். அங்கிருந்து நாம் ஒன்றாகத் தொடங்கலாம்.
ஒவ்வொரு பருவத்திற்கும் ஓர் இடம்.




வகுப்பறைக்கு அப்பால்.
தோட்டம், கூடைப்பந்து மைதானம், நாடக ஒத்திகை என ஒவ்வொன்றும் குழந்தைகளுக்கு முயற்சி செய்யவும், உருவாக்கவும், ஒன்றாகப் பணியாற்றவும் வாய்ப்பளிக்கின்றன.
வளாக வாழ்க்கையை அறிய வளாகக் காணொளிசம்ஸ்காராவுக்கு வரவேற்கிறோம்
“நான் இந்த உலகத்திற்கு வந்தேன்” என்று சொல்கிறோம். “நான் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து தோன்றினேன்” என்பதே இன்னும் பொருத்தமாக இருக்குமோ? வானத்து நட்சத்திரங்கள் போலவும் கடலின் அலைகள் போலவும் நாமும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்துதானே தோன்றுகிறோம்?
இலையுதிர் காலத்தில் செந்நிறமாக மாறுவதை ஏற்றுக்கொள்ளும் பச்சை இலை நாம். அளவற்ற மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் பறக்கும் பறவை நாம். எப்போதும் ஒளிவீசும் கதிரவன் நாம். நிபந்தனையற்ற அன்பைப் பொழியும் மேகங்கள், ஒன்றிணைந்து உழைக்கும் எறும்புகள், அனைவருக்கும் அழகிய அனுபவங்களைப் பொழியும் மழை எல்லாம் நாமே.
நமது இயல்பை மனதில் கொண்டு திறந்த கற்றல் சூழலை உருவாக்கினோம். படைப்பாற்றல் அதனுடன் பின்னிப் பிணையும்போது ஒவ்வொரு எண்ணமும் கதையாகிறது. ஒவ்வொரு சிந்தனையும் விரிவான கற்றலுக்கும் உள்ளத்தைத் தொடும் மகிழ்ச்சியான பயணத்திற்கும் வழி செய்கிறது. எங்கள் பசுக்களான ராதா, ராணியுடன் சேர்ந்து குழந்தைகளை அன்புடன் வரவேற்கிறோம். அந்த அன்பில் அவர்களது உள்ளம் வெளிப்படுகிறது.
எங்களைச் சந்தியுங்கள்.
உங்கள் குழந்தை, வகுப்பறைகள் மற்றும் வளாகப் பார்வை குறித்து எங்கள் குழுவுடன் பேசுங்கள்.




