முன்னாள் மாணவர்களைச் சந்தியுங்கள்
மீனாட்சி, நிர்மல், சஞ்சய் ஆகியோர் சம்ஸ்காராவில் தங்கள் அனுபவங்களைத் தங்களது சொற்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகும் முன்னாள் மாணவர்கள் சம்ஸ்காரா சமூகத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். அவர்கள் உலகின் பல பகுதிகளில் மேற்படிப்பைத் தொடர்ந்து வெவ்வேறு பணித்துறைகளில் பயணிக்கிறார்கள்.

முன்னாள் மாணவர்களின் நேர்காணல்கள்

மீனாட்சி
பத்தாம் வகுப்பை முடித்த ஆண்டு 2022
நேர்காணலைப் பார்க்க · மீனாட்சி
சஞ்சய்
பத்தாம் வகுப்பை முடித்த ஆண்டு 2020
நேர்காணலைப் பார்க்க · சஞ்சய்நிர்மலின் நினைவுகள்
சம்ஸ்காராவை விட்டு வந்து சரியாக ஓராண்டு ஆகிறது. அங்கிருந்த சூழலும் என் ஆசிரியர்களும் நான் கல்வி கற்ற முறையும் இன்னும் நினைவில் வருகின்றன. அங்கே எட்டு அருமையான ஆண்டுகள் கழித்தேன்! மொழி, மேடைப் பேச்சு, செய்முறை அறிவு ஆகியவற்றில் நான் எப்படி வளர்ந்தேன் என்பதை உணர்கிறேன்.
இப்போது ஒரு சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கிறேன். ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு என் அனுபவத்தில் ஆய்வகத்தில் நேரடியாக வேலை செய்யும் வாய்ப்புகள் குறைந்தன. ஏற்கெனவே எழுதப்பட்ட செய்முறைகளை நகலெடுத்துத் தர வேண்டியிருந்தது. சம்ஸ்காராவிலோ வாரத்துக்கு ஒருமுறையாவது ஆய்வகத்திற்குச் சென்று, ரசாயனங்களையும் கருவிகளையும் கையாண்டு, கற்றதைச் சோதிக்க முடிந்தது. அடிப்படைக் கருவிகளைத் தாங்களே பயன்படுத்தக் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன்.
செய்து பெற்ற அறிவே நிலைத்து நிற்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர்கள் என் படைப்பாற்றலையும் கலை உணர்வையும் வளர்த்தார்கள். என் வழியில் நிதானமாக வளர இடமளித்தார்கள். சிறு வயதிலேயே வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் சுமார் 3,000 புத்தகங்கள் கொண்ட நூலகம் கிடைத்தது! என் சொல்வளமும் பேச்சுத் திறனும் வளர்ந்தன. நான் ஒரு சம்ஸ்காரா மாணவராக இருந்தேன், இருக்கிறேன், என்றும் இருப்பேன் என்று பெருமையுடன் சொல்வேன்.
விளையாட்டு, பாடம், இணைப் பாட ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், உதவி அக்காக்கள், சமையல் பணியாளர்கள், எங்கள் ஆன்ட்டிகள் என அனைவருக்கும் நன்றி. எங்கள் தாளாளருக்கும் முதல்வருக்கும் பள்ளியின் மீதிருந்த ஈடுபாடு மாணவர்களிலும் ஆசிரியர்களிலும் தெரிந்தது. மேடைப் பேச்சு, விவாதம், நிகழ்ச்சிகள், மன்றச் செயல்பாடுகள், சமையல், ஆண்டுக்கான கருப்பொருள் ஆகியவற்றிலும் வளர்ந்தோம். சம்ஸ்காரா என் வாழ்வில் ஒரு திருப்புமுனை. அதன் தாக்கத்திற்கு நானும் என் வகுப்பு நண்பர்களுமே சாட்சிகள். சொல்லில் அடக்க முடியாத ஓர் அனுபவம் அது. எனக்கு சம்ஸ்காரா ஒரு “மகிழ்ச்சியான நினைவு”.
