A. சொற்களை நெய்யும் கலை
சொற்கள் நம்மை ஒருவரோடு ஒருவர் இணைக்கின்றன. அவற்றின் மூலம் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவும் பிறரை வழிநடத்தவும் முடிகிறது. சம்ஸ்காரா அகாடமியின் “Weavers Craft” பேச்சுக் கலைத் திட்டம் மாணவர்களிடம் வளர்க்க விரும்புவது இந்தத் திறன்களைத்தான்.
எண்ணங்களையும் உணர்வுகளையும் கோர்த்து, கேட்பவரை ஈர்க்கும் தெளிவான உரையாக மாற்றுவதுதான் இங்கு பயிற்சி. மேல் தொடக்கநிலை முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் முன்கூட்டியே தயாரித்த விளக்கவுரைகள், விவாதங்கள், உடனடிப் பேச்சு ஆகியவற்றில் பங்கேற்கிறார்கள். தங்கள் சொற்கள் கேட்பவரிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பேசிப் பார்த்தே அறிகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கு வெளியிலிருந்து வரும் நிபுணர் உரையாடல், தலைமைப் பண்பு, பேசும்போது தன்னம்பிக்கை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கிறார். எழுதி வைத்த உரையை மனப்பாடம் செய்வதைவிட, தன் கருத்து என்ன என்பதைத் தெளிவுபடுத்தி, அதைத் தன் சொந்தக் குரலில் கேட்பவரிடம் கொண்டு சேர்ப்பதே பயிற்சியின் நோக்கம்.
B. வாராந்திர அமர்வுகளில் வளரும் பேச்சும் தன்னம்பிக்கையும்
மேல் தொடக்கநிலையிலிருந்து 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றவாறு Weavers Craft வாராந்திர அமர்வுகள் அமைக்கப்படுகின்றன. குரலின் ஏற்ற இறக்கம், உடல்மொழி, பார்வையாளர்கள் முன்னிலையில் பேசும் முறைகள், ஒரு கருத்தைத் தெளிவாகச் சொல்வது ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் பயில்கிறார்கள்.
இளைய மாணவர்கள் கதை சொல்வதிலும் சிறிய விளக்கவுரைகளிலும் தொடங்கலாம். மூத்த மாணவர்கள் விதிமுறைகளுடன் கூடிய விவாதம், முன்தயாரிப்பின்றிப் பேசுதல், ஒரு கருத்துக்கு மற்றவரின் ஆதரவைப் பெறும் வகையில் வாதிடுதல் ஆகியவற்றைப் பயில்கிறார்கள். மாணவர்களின் உணர்ச்சிகள், சிந்தனை ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ப இந்தப் பயிற்சிகளும் ஆழமடைகின்றன.
பயிற்சியாளர் நடைமுறைப் பயிற்சிகள், வாழ்க்கையில் நிகழ்ந்த எடுத்துக்காட்டுகள், அனைவரும் பங்கேற்கும் செயல்பாடுகள் ஆகியவற்றை வழங்குகிறார். மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் பார்வையையும் பகிர்ந்து, கேட்பவர்களுடன் தொடர்புகொள்ளத் தங்களுக்கே உரிய வழியைக் கண்டறிகிறார்கள். குறையின்றிப் பேச வேண்டும் என்பதைக் காட்டிலும், படிப்படியாகத் தன்னம்பிக்கை பெறுவதே முக்கியம்.
C. பேச்சுத் திறனுக்கு மேடை தரும் “ரஸா”
ஆண்டுக்கு ஒருமுறை Weavers Craft பயிற்சி “ரஸா” (Rasa) என்ற இலக்கியப் போட்டியில் நிறைவுபெறுகிறது. ஆண்டு முழுவதும் கற்றவற்றைப் பல்வேறு வகையான பேச்சுப் போட்டிகளில் பயன்படுத்திப் பார்க்க மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.
நிகழ்ச்சியில் இடம்பெறுபவை:
- தயாரித்துப் பேசுதல்: பல வாரங்கள் ஆராய்ந்து தயாரித்த தலைப்பில் உரையாற்றுவது.
- உடனடிப் பேச்சு: அப்போதே வழங்கப்படும் தலைப்பைப் பற்றி முன்தயாரிப்பின்றிப் பேசுவது.
- விவாதம்: தங்கள் கருத்தை முன்வைத்து, எதிர்க்கருத்துக்கு அப்போதே தக்க பதில் அளிப்பது.
- Just A Minute (JAM): ஒரு தலைப்பில் தயங்காமல், சொன்னதையே திரும்பச் சொல்லாமல், 60 வினாடிகள் பேசுவது.
இந்த ஆண்டு 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக “Brand Storytelling Challenge” என்ற புதிய போட்டியையும் அறிமுகப்படுத்தினோம். மாணவர்கள் நன்கு அறிமுகமான ஒரு வணிகப் பெயரைத் தேர்ந்தெடுத்து, அதன் வெற்றிக்குப் பின்னுள்ள கதையை ஆராய்ந்து வழங்குகிறார்கள். அதன் சந்தைப்படுத்தல் உத்திகள், வணிகப் பெயரின் மதிப்பு, அது மக்களிடையே பரவலாக அறிமுகமான விதம் ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன.
மாணவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதோடு, கருத்துகளை ஆய்ந்து சிந்திப்பதிலும் பிறருக்குப் புரிய வைப்பதிலும் அவர்கள் எவ்வளவு வளர்ந்திருக்கிறார்கள் என்பதையும் ரஸாவில் காணலாம். இதுவே Weavers Craft திட்டத்தின் மையம்.
D. கருத்தை வெளிப்படுத்துவதன் வழியாகத் தலைமைப் பண்பு
பார்வையாளர்கள் முன் நின்று உரையாற்றுவதோடு Weavers Craft முடிந்துவிடுவதில்லை. தம் கருத்தைத் தெளிவாகச் சொல்லவும், அப்போதே சிந்தித்து பதிலளிக்கவும், ஓர் அறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவும் பழகும்போது மாணவர்களிடம் தலைமைப் பண்பும் வளர்கிறது.
மற்றவர் பேசும்போது கவனமாகக் கேட்பது, தம்முடையதிலிருந்து மாறுபட்ட பார்வையை மதிப்பது, ஒரு குழுவாகச் செயல்படுவது ஆகியவற்றையும் மாணவர்கள் கற்கிறார்கள். பள்ளியில், வீட்டில், பின்னர் பணியிடத்தில் என வாழ்க்கையின் பல தருணங்களில் இந்தப் பழக்கங்கள் துணைபுரியும்.
தெளிவாகத் தொடர்புகொள்வதன் மூலம் தன்னையே வழிநடத்தக் கற்றுக்கொடுப்பது Weavers Craft திட்டத்தின் தனிச்சிறப்பு. மாணவர்கள் இந்தத் திறனைத் தங்கள் வாழ்விலும் தங்களைச் சுற்றியுள்ள சூழலிலும் மாற்றம் கொண்டுவரப் பயன்படுத்த முடியும்.
E. வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும் பேச்சுக் கலை
தெளிவாகச் சொல்வது, தன்னம்பிக்கையுடன் பேசுவது, ஒரு கருத்தைப் பல கோணங்களில் ஆராய்வது ஆகிய Weavers Craft பயிற்சிகள் வாழ்நாள் முழுவதும் பயன்படும். தொழில் முனைவோர், கலைஞர், ஆசிரியர் அல்லது ஒரு குழுவின் தலைவர் என மாணவர்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் பிறருடன் பொருளுள்ள உரையாடலை நடத்தும் திறன் அவர்களுக்குத் தேவைப்படும்.
சம்ஸ்காரா அகாடமியில் Weavers Craft என்பது மாணவர்கள் தங்களுக்கே உரிய பேச்சு நடையைக் கண்டறியவும் தலைமை ஏற்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவும் இடம். புதிய சவால்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் தங்கள் ஆற்றலை இன்னும் நன்றாக அறிந்துகொள்கிறார்கள்.
Weavers Craft வழியாக மாணவர்கள் பிறரிடம் பேசுவதோடு, தங்கள் சொற்களால் வழிநடத்தவும், தாக்கத்தை ஏற்படுத்தவும், சிறிது சிறிதாக மாற்றத்தை உருவாக்கவும் கற்கிறார்கள்.
